அல்மினா விசேடதேவையுடையோர்களுக்கான வீட்டு திட்டம் மக்களிடம் கையளிப்பு

அம்பாறை பொத்தவில் பிரதேச செயலாளர் பிரிவில் அல்மினா எனும் பெயரில் விசேடதேவையுடையோருக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள 25 வீடுகளைக் கொண்ட செமட்ட செவண 267வது வீட்டுத் திட்டத்தினை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

பொத்துவில் பிரதேச செயலாளர் பிவில் செங்காமம் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அல்மினா கிராமம் வீட்டுத்திட்ட திறப்பு விழாவானது சனிக்கிழமை(31) காலை திறந்து மக்களிடம் கையளிக்கப்பட்டு இருந்தன.

இந்நிகழ்வில் மதகுருமார்கள், இராஜங்க அமைச்சர் எம்.சீ.பைசால் காசிம்,கிழக்கு மாகாணசபைத் தலைவர் சந்திரதாச கலப்பத்தி திருக்கோவில் பொத்துவில் பிரதேசசபை தவிசாளர்களான இ.வி.கமலராஜன்,எம்.எஸ்.அப்துல் வாசித், சபை உறுப்பினர்கள் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் உட்பட அரச அதிகாரிகளும் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் அதிகாரிகளும் கலந்து கொண்டு இருந்தனர்.

விசேடதேவையுடையோர்களுக்கான இவ் அல்மினா கிராம வீட்டுதிட்டமானது இரண்டு படுக்கை அறைகள், வரவேற்று மண்டபம் சமயல் அறை உற்பட குடிநீர்,மின்சார வசதிகள் மற்றும் பாதைகள் மூலிகைத் தோட்டம் என அடிப்படை வசதிகளைக் கொண்ட வீட்டுத் திட்ட தொகுதியாக அமைக்கப்பட்டுள்ளன.

இதன்போது அமைச்சர் சஜித் பிரேமதாஸ அவர்களினால் விசிரி கடன் காசோலைகள், கண்பார்வை குறைந்தோருக்கு மூக்கு கண்ணாடிகள், மருத்துவ உதவிகள் மற்றும் பல மக்கள் நலன் செயற் திட்டங்களும் வழங்கப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Karthikesu

error: Content is protected !!