கெண்டபரி பேராயர் – ஜனாதிபதி சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள கெண்டபரி பேராயர் அதிவணக்கத்திற்குரிய ஜஸ்டின் வெல்பி ஆண்டகை, நேற்று இரவு ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன் போது, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்காக, ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை, பேராயர் பாராட்டியுள்ளார்.

மிகுந்த மரியாதையுடன் பேராயரை வரவேற்ற ஜனாதிபதி, இலங்கை விஜயம் நாட்டுக்கு ஆசீர்வாதமாகுமென குறிப்பிட்டதுடன், அவரது வருகைக்கு தனது நன்றிகளையும் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, கெண்டபரி பேராயர் ஜனாதிபதியுடன் மிக நெருங்கிய சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், நாட்டின் அனைத்து மதத்தினரிடையேயும், பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வை கட்டியெழுப்பி, அனைத்து மதத்தினரின் வரப்பிரசாதங்களையும் உறுதிப்படுத்துவதற்காக, ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை பாராட்டினார்.

சுமூக கலந்துரையாடலை தொடர்ந்து, அதிவணகத்திற்குரிய ஸ்டின் வெல்பி ஆண்டகை, ஜனாதிபதிக்கு ஆசீர்வாதம் வழங்கியதுடன், இந்நிகழ்வை அடையாளப்படுத்தும் வகையில், நினைவுப் பரிசில்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!