அம்பாறையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுள் அமைதிப்ரேணி!

காணாமல் போதலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு, அம்பாறை மாவட்ட காணாமல் போனோரின் முஸ்லிம் குடும்ப ஒன்றியத்தின் விசேட துஆ பிரார்த்தனையுடன் ஊடகவியாளர் மாநாடும், அமைதிப் பேரணியும் இன்று அம்பாறை அட்டாளைச்சேனையில் நடைபெற்றது.


மனித எழுச்சி நிறுவனம் மற்றும் அம்பாறை மாவட்ட காணாமல் போனோரின் முஸ்லிம் குடும்ப ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சம்மாந்துறை மற்றும் நிந்தவூர், சாய்ந்தமருது, மருதமுனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த காணாமல் போன உறவினர்களர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கடந்த கால யுத்தமானது இலங்கை வாழ் தமிழ், சிங்கள சமூகங்களுக்கு மாத்திரமல்லாது முஸ்லிம் சமூகத்தின் உயிர், உடமைகளுக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இருந்த போதிலும் யுத்தப்பாதிப்புக்களுக்கும், உரிமை மீரல்களுக்குமான நீதி தீர்க்கும் பொறிமுறைகளில் முஸ்லிம் சமூகம் பாராபட்சமாக நடத்தப்பட்டு புறந்தள்ளப்பட்டு வருவதாக அம்பாறை மாவட்ட காணாமல் போனோரின் முஸ்லிம் குடும்ப ஒன்றியத்தின் உறுப்பினர்கள் இதன் போது தெரிவித்தனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!