வவுனியாவில், இளைஞர் யுவதிகளுக்கான உறவுப்பால நிகழ்வு

பதுளை பண்டாரவளை பகுதிகளில் இருந்து, சுமார் 50 ற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள், வட பகுதிகளுக்கு உறவுப்பாலம் நிகழ்வுகளுக்காக வருகை தந்துள்ளனர்.


அந்தவகையில், வவுனியா மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில், இன்று வவுனியாவில் நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

கடந்த 28 ஆம் திகதி முதல், வவுனியாவில் தங்கியிருந்து, தமிழர்களின் வாழ்வியல் தொடர்பாகவும், தமிழர்களின் பாரம்பரியங்கள் உணவு, உடை, கலாசாரம் போன்றவற்றைப் பார்வையிட்டு, பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றனர்.

அத்துடன், பல்வேறு பகுதிகளுக்கு சென்று நிகழ்வுகளில் பங்கேற்கின்றனர்.

இன்று காலை, கோவில்குளம் பகுதியில் உள்ள உமா மகேஸ்வரனின் நினைவிடத்திற்குச் சென்று பார்வையிட்டுள்ளதுடன், கோவில்கள், பள்ளிவாசல் ஆலயங்கள் போன்றவற்றுக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 4 நாட்களாக, உறவுப்பாலம் செயற்திட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!