அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் இந்து மாணவர்களின் ஒழுக்கக் கல்வியுடன் பண்ணிசை பயிற்சி நெறியையும் முன்னெடுக்கும் நோக்கில் இந்து சமயகலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடாக திருக்கோவில் திருஞான வாணி முத்தமிழ் இசைமன்ற அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான பண்ணிசை பயிற்சி நெறிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்வு திருக்கோவில் திருஞானவாணி முத்ததமிழ் இசை மன்றித்தின் தலைவர் ஏ.கணேசமூர்த்தி தலைமையில் இன்று காலை பண்ணிசை பயிற்சிநெறி ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இதன்போது திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய குரு சிவஸ்ரீ. நீ.அங்குசநாதக் குருக்கள் மங்கள வீளக்கேற்றல் மற்றும் ஆசீர்வாத உரையுடன் ஆரம்பமானதுடன் அறநெறி பாடசாலையில் அதிபர் சங்கீதபூசணம் செல்வி ஆ.பரமேஸ்வரியின் பஞ்ச புராண தோத்திரத்துடன் நிகழ்வு இனிதே மங்களகரமாக ஆரம்பமாகின.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட கலாசார மாவட்ட உத்தியோகத்தர் கே.ஜெராஜ், திருக்கோவில் பிரதேச செயலககலாசார உத்தியோகத்தர் பிரசாந் சர்மிளா மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.