காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி!

சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு, வவுனியாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று, இன்று முன்னெடுக்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி, வடக்கு கிழக்கில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில், இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமான பேரணி, இராணுவ சோதனைச்சாவடி அமைந்திருந்த ஓமந்தை இறம்பைக்குளம் வரை, பொலிசாரின் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்றது.

இதன் போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், ஓமந்தை சோதனைச்சாவடி அமைந்திருந்த பகுதியின் வேலியை அகற்றியவாறு உள்நுழைந்து, அங்கு ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் எக்நெலிகொடவின் பாரியார் எக்நெலிகொட சந்தியா இணைந்து கொண்டார்.


இதன் போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடும் போராட்ட காலத்தில் மரணித்த, 53 உறவுகளுக்குமான நினைவு மலர் ஒன்றும், வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கையளிக்குமாறு, அருட்தந்தை யோசப் அந்தோனிப்பிள்ளை யேசுதாஸ் அடிகளராரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

போராட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், ச.சிறிதரன், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், ப.சத்தியலிங்கம், ப.தியாகராஜா, இ,இந்திரராஜா, தமிழ் மக்கள் கூட்டணி பிரதிநிதிகள் உட்பட பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!