கூட்டணி கைச்சாத்தாகும்போது, வேட்பாளர் அறிவிக்கப்படுவார் – ராஜித

எதிர்க்கட்சிதலைவர் மஹிந்த ராஜபக்ஷ தனது குடும்ப உறுப்பினரை களமிறக்கியதை போன்று குடும்ப உறுப்பினரை களமிறக்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது என சுகாதாரத்துறை அமைச்சர்  ராஜிதசேனாரத்ன தெரிவித்தார்.

அலரிமாளிகையில் இடம் பெற்றஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்துதெரிவித்த அவர்.

சிறுபான்மை மக்களை பகைத்துக்கொண்ட  ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படமாட்டார், வேட்பாளர் தெரிவும், ஐக்கிய தேசிய முன்னணியின் ஒப்பந்தமும் ஒரேநாளில் கைச்சாத்தாகும்.

தற்போது ஐக்கிய தேசியக் கட்சியைசேர்ந்தவர்கள் முன்னெடுத்துவரும் தேவையற்ற செயற்பாட்டால் எதிரணி பலமடையும், அதுகட்சியின் பிளவுக்கும் வழிவகுக்கும் எனவும் ,தன்னைஅண்மையில் சந்தித்தஅவர்களிடம் அது குறித்து மிக தெளிவாக எடுத்துரைத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!