மட்டு, மகளிர் சங்க மீளமைப்பும், நிர்வாக தெரிவும்!

மட்டக்களப்பு மாவட்ட மகளிர் மகா சங்கத்தினை மீளமைப்பு செய்யும் கூட்டமும் நிர்வாக தெரிவும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.


மட்டக்களப்பு மாவட்ட செயலக மகளிர் அபிவிருத்தி அலுவலக உத்தியோகத்தர் அருனாலினி சந்திரசேகரம் ஒழுங்கமைப்பில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்தா தலைமையில் மாவட்ட மகளிர் மகா சங்கத்தினை மீளமைப்பு செய்யும் கூட்டமும் நிர்வாக தெரிவும் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

சமூக பெண்களின் திறமைகள், சாதனைகள், அபிவிருத்தி போன்றவற்றின் ஊடாக பெண்களின் உரிமைகளையும், பெண்களின் பொருளாதார வளர்ச்சியையும் தேசிய மட்டத்தில் கொண்டு செல்வதற்கும், சமூக அபிவிருத்தியில் பெண்களை இணைத்துக் கொள்வதற்குமான செயல் திட்டமாக மாவட்ட மகளிர் மகா சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த 2014ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மாவட்ட மகளிர் மகா சங்கம் மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளில் செயல்படுகின்ற கிராம மகளிர் அபிவிருத்தி சங்கங்களுடன் இணைந்து செயல்பட்ட மாவட்ட மகளிர் மகா சங்கம் கடந்த நான்கு வருடங்களாக கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் மாவட்ட மகளிர் மகா சங்கத்தினை மீளமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமாரினால் முன்னெடுக்கப்பட்டு அதற்கான மீளமைப்பு செய்யும் கூட்டமும் நிர்வாக தெரிவும் இன்று நடைபெற்றது.

மாவட்ட மகளிர் மகா சங்கத்தினை மீளமைப்பு செய்யும் கூட்டம் மற்றும் நிர்வாக தெரிவு செய்யும் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளில் செயல்படுகின்ற மகளிர் அபிவிருத்தி சங்கங்களின் உறுப்பினர்கள், செயலக மகளிர் அபிவிருத்தி செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!