அமைச்சர் சஜித் பிரேமதாச, நாளை அம்பாறைக்கு விஜயம்

அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ள அமைச்சர் சஜித் பிரேமதாச பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் அல்மினா எனும் பெயரில் விசேட தேவையுடையோருக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள 25 வீடுகளைக் கொண்ட வீட்டுத் திட்டத்தினை மக்களிடம் கையளிக்கவுள்ளார்.


பொத்துவில் செங்காமம் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அல்மினா வீட்டுத்திட்ட திறப்புவிழாவில் நாளை காலை வீடுகள் திறந்து மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதுடன் இந்நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் அம்பாறை மாவட்ட செயலாளர் உட்பட அரச அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

விசேட தேவையுடையோர்களுக்கான இவ் அல்மினா வீட்டு திட்டமானது இரண்டு படுக்கை அறைகள், வரவேற்பு மண்டபம், சமயல் அறை உற்பட குடிநீர், மின்சார வசதிகள் மற்றும் பாதைகள் என அடிப்படை வசதிகளைக் கொண்டு வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன்போது அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் விசிரி கடன் காசோலைகள், கண்பார்வை குறைந்தோருக்கு மூக்கு கண்ணாடிகள், மருத்துவ உதவிகள் மற்றும் பல மக்கள் நலன் செயற் திட்டங்களும் வழங்கப்படவுள்ளதாக தெரிவக்கப்பட்டுள்ளன.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!