யாழில், நாட்டிற்கா ஒன்றிணைவோம் செயற்திட்டம் : ஜனாதிபதி தலைமையில்

பலத்த பாதுகாப்பின் மத்தியில் பருத்தித்துறை துறைமுகத்திற்கான அடிக்கல்லை ஜனாதிபதி நாட்டி வைத்தார்.


நாட்டிற்காக ஒன்றிணைவோம் எனும் தொனிப் பொருளிலான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக ஒரு நாள் விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி இன்று யாழ்ப்பாணத்தி;ற்கு வருகை தந்துள்ளார்.

இதன்போது, ஜனாதிபதியின் யாழ் விஜயத்தின் முதலாவது நிகழ்வாக, பருத்தித்துறை துறைமுகத்திற்கான பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டதுடன், துறைமுகத்திற்கான அடிக்கல்லினையும் ஜனாதிபதி நாட்டி வைத்தார்.

விவசாயம் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு மற்றும் ஆசிய வங்கியின் 13 ஆயிரத்து 500 பில்லியன் ரூபா நிதியில் துறைமுகத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், விவசாயம் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் ஹரிசன் பெர்னான்டோ, வடமாகாண ஆளுநார் சுரேன் ராகவன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், அங்கஜன் இராமாநாதன், மஸ்தான் உள்ளிட்ட பல அரசியல் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், நீரியல்வளத்துறை அதிகாரிகள், பொது மக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!