ஜோகோவிச் மற்றும் செரீனா மூன்றாவது சுற்றுக்கு

அமெரக்க பகிரங்க டென்னிஸ் போட்டியின் மூன்றாவது சுற்றுக்கு ஜோகோவிச் மற்றும் செரீனா ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி கடந்த 19 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

இதில் மூன்றாவது நாளில் மழை காரணமாக குறைவான ஆட்டங்களே நடந்தன. ஆண்கள் பிரிவில் நடந்த 2 ஆவது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனா செர்பிய வீரர் ஜோகோவிச் 6-4, 7-6 (7-3), 6-1 என்ற நேர்செட்டில் அர்ஜெண்டினாவின் ஜூவான் இக்னாசியோ லன்டிரோவை தோற்கடித்து 3 ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 3-6, 6-2, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் டாமிர் சும்ஹூரை (போஸ்னியா) தோற்கடித்தார்.

இதேவேளை பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2 ஆவது சுற்று ஆட்டம் ஒன்றில் 37 வயதான அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 5-7, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனையான 17 வயது கேத்ரின் மெக்னாலியை போராடி வீழ்த்தினார்.

உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா 6-4, 6-4 என்ற நேர்செட்டில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை வீனஸ் வில்லியம்சை (அமெரிக்கா) வெளியேற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!