மக்களின் வரி பணத்தில் வாழும் ஜனாதிபதியாக இருக்க மாட்டேன்

நாட்டிலுள்ள விவசாயிகளின் உயிரை பாதுகாத்து அவர்களின் உற்பத்திகளுக்கு சிறந்த விலையை, நவம்பர் மாதம் உருவாக போகும் புதிய அரசாங்கத்தி ஊடாக வழங்குவதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இரத்னபுரி மாவட்டத்தின் ஹடங்கல வெலிகேபொல பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உதாகம்மான கிராமத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

பொது மக்களின் வரி பணத்தில் வாழும் ஜனாதிபதியாக இருக்க தயார் இல்லை என்றும், மாளிகை அரசியலை தான் முற்று முழுதாக நிராகரிப்பதாகவும், வருடத்தின் 365 நாட்களும் நாள் ஒன்றின் 24 மணித்தியாலங்களும் மக்கள் சேவையில் ஈடுபடுத்தி கொள்வதாகவும் அமைச்சர் கூறினார்.

அரசியல்வாதிகள் பயன்படுத்தும் குளிரூட்டப்பட்ட அறைகளின் தண்ணீர் கட்டணம் உள்ளிட்டவைகள் மக்களின் வரி பணத்தில் செலுத்தப்படுவதாகவும் எனவே அரசியல்வாதிகள் தீர்மானங்களை எடுக்கும் போது மக்கள் நலம் குறித்து சிந்திக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

தான் பணம் அல்லது பிற சலுகைகளுக்கு பேராசை கொண்டவர் அல்ல என்றும் அவ்வாறான நிலைமைக்கு தன்னை மாற்றிக்கொள்ள எவ்வகையிலும் தயாரில்லை எனவும் அவர் கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், சாஹிருகம´ என்ற இந்த கிராமத்தில் 23 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதற்காக 374 இலட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது.

சுத்தமான குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட சகல அடிப்படை வசதிகளும் இந்த கிராமத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன´ என்றார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!