ரன் பியாபத் செயற்திட்டம் ஆரம்பம்

ரன் பியாபத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு செயற்திட்டம், கொழும்பில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.


அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் கருத்திட்டத்தின்படி, வெளிநாடு செல்லும் அனைவருக்கும் ஒரே வேலைத்திட்டத்தின் கீழ், பாதுகாப்பு, காப்புறுதி, நலன்கள் மற்றும் வரப்பிரசாதங்கள் வழங்கும் ரன் பியாபத் செயற்திட்டம், வெளிநாட்டு தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வெளிநாட்டு நாணய வருமானத்தில் பிரதான பங்காற்றுவது, வெளிநாடுகளில் தொழில் புரிவோர் கொண்டு வரும் பணமாகும்.

அந்தவகையில், தூர தேசங்களில் பெரும் அர்ப்பணிப்புகளை செய்து வியர்வை சிந்நும் மக்களுக்காக, இதுவரை பதவியில் இருந்த எந்த அரசாங்கமும் போதுமான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதா என்பது சந்தேகத்திற்குரியது என, ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் கொடுப்பனவுகள், பரவல் நிலை காரணமாக, முறையாக மக்களை செயற்றடையவில்லை என்பதுடன், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல், வெளிநாட்டு தொழிலுக்கு செல்வது சட்டத்தின்படி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அவ்வாறு வெளிநாடு செல்லும் சிலர் இருப்பதும், அதற்கான காரணம் என, அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!