திருமலையில், மீனவர் பிரச்சினை தொடர்பில் ஆராய்வு

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களின் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றினை தீர்க்கும் வகையிலான கலந்துரையாடல் இன்று திருகோணமலையில் நடைபெற்றது.


கிழக்கு மாகாண கடற்தொழில் திணைக்கள ஆணையாளர், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மீனவ அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோதமான மீன்பிடி காரணமாக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

எதிர்காலத்தில் மீனவர்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்த்து வைக்கலாம் என்பது தொடர்பாகவும் பரிசீலிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலுக்கு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடகிழக்கு இணைப்பாளர் அண்டனி ஜேசுதாசன் கிழக்கு மாகாண மீன்பிடி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சுதாகரன், திருகோணமலை மாவட்ட மீன்பிடி உதவி பணிப்பாளர் கே.சேனாரட்ன மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மீன்பிடி திணைக்கள அதிகாரிகள் மீனவர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!