நுவரெலியாவில், சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வு : 8 பேர் கைது

நுவரெலியா பொகவந்தலாவ லொய்னோன் தோட்ட பகுதியில் உள்ள ஓடை ஒன்றில் இருந்து, கேசல் கமுவ ஒயாவிற்கு நீர் எந்தி செல்லும் ஆற்றில், சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேரும், பொகவந்தலாவ செல்வகந்த தோட்ட பகுதியில் 2 சந்தேக நபர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைது இடம்பெற்றுள்ளதுடன், மாணிக்க கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யபட்ட சந்தேக நபர்கள், இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலையாகுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!