வவுனியாவில், கிராம பாதுகாப்பு தொடர்பான செயலமர்வு

கிராம பாதுகாப்பு தொடர்பான விசேட செயலமர்வு, வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில், இன்று நடைபெற்றது.


மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற செயலமர்வில், உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி, ஜனாதிபதி செயலக உதவிச் செயலாளர் ஆகியோர், அதிதிகளாக கலந்துகொண்டனர்.

கிராமத்தின் சமூகம் தொடர்பாக முழுமையான மீளாய்வு ஒன்றை செய்து, தகவல் தொகுதி ஒன்றை நாடாத்தி செல்லுதல், வெளிப்புற எதிரிகளினால் கிராமத்திற்கு தொடுக்கக் கூடிய சவால்களை நேரகாலத்துடன் அடையாளம் காணும் உளவுத் தகவல்களை தொடர்ந்து திரட்டுதல், வெளிப்புறங்களில் இருந்து கிராமத்திற்கு வருகின்ற நபர்கள், அமைப்புக்கள் தொடர்பாக எப்பொழுதும் அவதானமாக இருந்து கொண்டு, உரிய தகவல்களை சேகரித்தலும், தேவைக்கேற்ப பாதுகாப்பு பிரிவுகளுக்கு அறிவுறுத்தலும், கிராமச் சமூகத்தின் ஒற்றுமை, சகவாழ்வு, சகோதரத்தன்மை என்பவற்றை விருத்தி செய்யக்கூடிய செயற்பாடுகளை மேம்படுத்தல் போன்ற 16 செயற்றிட்டங்கள், கிராம பாதுகாப்பு செயற்றிடத்தினுடாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இத்திட்டம் தொடர்பான முழுமையான விளக்கத்தை, உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி வழங்கினார்.

செயலமர்வில், பிரதேச மற்றும் மாவட்ட உதவிச் செயலாளர், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையின் உயர் அதிகாரிகள், அரச திணைக்களங்களின் உயர் நிலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!