வவுனியா கோவிற்குளம் பகுதியில் வெடி பொருட்கள் மீட்பு!

வவுனியா கோவிற்குளம் 10 ஆம் ஒழுங்கை பகுதியில் இருந்து, இன்று காலை 10.00 மணியளவில் வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.


கோவிற்குளம் 10 ஒழுங்கையிலுள்ள குளம் ஒன்றை மீள் புனரமைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள், பேக்கோ மூலம் குளத்திற்கு செல்லும் வீதி செப்பனிடும் பணியை இன்று காலை ஆரம்பித்திருந்தனர்.

வீதி செப்பனிடும் பணியின் போது, மண்ணில் புதையுண்ட நிலையில் வெடி பொருட்கள் காணப்பட்டுள்ளன.

அதனையடுத்து, பேக்கோ வாகனத்தின் சாரதி வவுனியா பொலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார், வெடி பொருட்களை பார்வையிட்டதுடன், வெடி பொருட்களை சுற்றி எச்சரிக்கை வேலி அமைத்தனர்.

அப்பகுதியிலிருந்து, 100 மீற்றர் வெடி பொருள் வயர் தொகுதி ஒன்று, குண்டை வெடிக்க செய்யும் கிளிப் ஒன்று, டெட்டனேட்டர்கள் இரண்டு ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

அவ்விடத்தில் மேலும் சோதனை நடவடிக்கையை மேற்கொள்ளவும், வெடி பொருட்களை பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்குறிய நடவடிக்கையை மேற்கொள்ளுவதற்கான நீதிமன்ற உத்தரவை பெறுவதற்குரிய நடவடிக்கையை, வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!