தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியை ஏமாற்றி விட்டனர் : தயாசிறி

சுதந்திர கட்சி தேசிய பட்டியலில் தெரிவு செய்தவர்கள் ஜனாதிபதியை ஏமாற்றி விட்டதாகவும், அவர்களை அழைத்து மீண்டு பேச தயாராக உள்ளோம் எனவும் சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

தேசிய பட்டியலில் தெரிவான சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கின்றது, அவர்கள் மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும், அவர்கள் மீது சில சமயம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.

ஏனென்றால் அவர்கள் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்டவர்கள் , வீட்டில் இருக்க வேண்டிய 12 பேரை மீண்டும் பாருமன்றத்திற்கு அனுப்பியது ஜனாதிபதி, எங்களுடைய கட்சியின் தலைவரை அவர்கள் அவமதித்திருக்கின்றார்கள், எனவே அவர்கள் அனைவரையும் நாம் அழைத்து கலந்துரையாடவுள்ளோம்.

மத்திய செயற்குழுவில் நாம் தேசிய பட்டியலில் தெரிவானவர்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளளோம், அவர்களுக்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டது.

எங்களுடன் இருக்கும் போது உடனடி தீர்வு இல்லாமல் நாம் அனைத்தையும் யோசித்து ஆராய்ந்து முடிவுகளை எடுக்கவேண்டும், எங்களுடைய முடிவும் கட்சியையும் பாதிக்க கூடாது, கட்சி ஆதரவாளர்களையும் பாதிக்க கூடாது.

எங்களுடைய கட்சி இல்லாமல் போகாது, யார் சென்றாலும் இந்த கட்சி புதுப்பொலிவு பெறும், புதிய இரத்தம் உருவாகும், புதிய தலைவர்கள் உருவாவார்கள், எனவே நாம் ஒன்றுக்கும் கவலைப்பட தேவையில்லை. என தெரிவித்துள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!