முகப்புத்தகத்தினூடாக நல்லூர் கந்தனைத் தரிசித்த சுமார் ஒரு இலட்சம் உறவுகள்!

நல்லூர் கந்தன் ஆலயத்தின் மகோற்சம் ஓம் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக 25 நாட்களும் நேரலையாக ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்நிலையில், இன்று கந்தனின் மகோற்சவத்தில் இரதோற்சம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் அலை கடலெனத் திரண்டு, கந்தனைத் தரிசிக்க ஆலய வளாகத்தில் சங்கமித்திருந்தனர்.

இதேவேளை, கந்தனின் இரதோற்சம் இன்று டான் தொலைக்காட்சிக் குழுமத்தின் அலைவரிசைகளில் ஒன்றான ஓம் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பானது. இதன்போது, இன்று ஓம் தொலைக்காட்சியின் முகப்புத்தகம் வாயிலாக 5 மணிநேர நேரலையில், சுமார் ஒரு இலட்சம் பார்வையாளர்கள் நேரடியாக இணைந்திருந்து, கந்தன் தரிசனத்தைப் பெற்றுக்கொண்டிருந்தனர்.

உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்தத் தரிசனைத்தை நேரடியாகக் கண்டு களித்தமை குறிப்பிடத்தக்கது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!