சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வுபெற்றார் மென்டிஸ்!

சர்வதேச கிரிக்கெட் போட்டியில், அதிவேகமாக 50 இலக்களை வீழ்த்திய, இலங்கை அணி வீரர் அஜந்த மென்டிஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஓய்வுபெற்றுள்ளார்.

 

34 வயதான அஜந்த மென்டிஸ், 2008ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு நுழைந்திருந்தார்.

சுழற்பந்து வீச்சாளரான இவரின் பந்து வீச்சு துடுப்பாட்ட வீரர்களுக்கு கடும் சவாலை வழங்கியிருந்தது. 2008ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற, ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில், இந்திய அணிக்கு எதிரான போட்டியில், 13 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக்கொடுத்து 6 இலக்குகளை கைப்பற்றி சாதனை படைத்திருந்தார்.

இறுதியாக 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த அஜந்த மென்டிஸ், ஆட்டத்திறன் இன்மை மற்றும் தொடர் காயங்களால் இலங்கை அணிக்குள் நுழைய முடியாது நிலை ஏற்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே அஜந்த மென்டிஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!