நல்லூர் வளாகத்தில், அனுமதியின்றி பறந்த ட்ரோன் கமராவால் குழப்பம்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்றசவத்தின் தேர்த்திருவிழா இன்று இடம்பெற்றிருந்த நிலையில், யாழ்ப்பாண மாநகர சபை முதல்வரின் எச்சரிக்கையை மீறி, நல்லூர் ஆலய பகுதியில் ட்ரோன் கமரா இன்று பறக்க விடப்பட்டிருந்தது.


ஆலய உற்சவ காலத்தில் நல்லூர் ஆலய சூழலில் எந்த விதமான ட்ரோன் கமராக்களும் பறக்கவிடப்படின் சுட்டு வீழ்த்தப்படும் என யாழ் மாநகர முதல்வரினால் ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் நல்லூர் கந்தன் தேர் உற்சவம் இடம்பெற்றிருந்தவேளை தென்னிலங்கை அரச ஊடகமொன்றினால் ட்ரோன் கமரா பறக்கவிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து அங்கு நின்றவர்களினால் குறித்த ஊடக நிறுவனத்தினரிடம் வினவியபோது, தாங்கள் விசேட அனுமதிபெற்றே இதனை பறக்கவிட்டுள்ளதாகவும் தங்களுக்கு தடை ஏதும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து யாழ் மாநர முதல்வர் மற்றும் ஆலய நிர்வாகத்தினரிடம் தெரியப்படுத்தப்பட்டது.

உடனடியாக அங்கு விரைந்த ஆலய பரிபாலன சபையினர் நீங்கள் எந்த இடத்தில் எந்த அனுமதிபெற்றாலும் நல்லூர் ஆலய வளாகத்திற்குள் ட்ரோன் கமரா பாவிக்க முடியாது எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து குறித்த நிறுவத்தினர் தமது ட்ரோன் கமராவை எடுத்துச் சென்றனர்.

நல்லூர் உற்சவ காலத்தில் பக்தர்களின் நன்மைகருதி யாழ்ப்பாண மாநகர சபையினரால் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும், தென்னிலங்கை அரச ஊடகத்தின் இச் செயற்பாடு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!