ஏற்றுமதி, இறக்குமதி செய்யத் திட்டம்!

கம்போடிய, இலங்கை உறவை வலுப்படுத்தும் நோக்கிலும், இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தியைக் கருத்திற் கொண்டும், கம்போடியாவிற்கும், இலங்கைக்குமிடையில், உற்பத்திப் பொருட்களை, ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இலங்கைக்கு வருகை தந்துள்ள கம்போடியா முஸ்லிம் விவகாரம் மற்றும் சிரேஷ்ட அமைச்சர் கலாநிதி ஒத்ஸமான் ஹஸன் மற்றும் முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால்துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு, அமைச்சின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.

இரு நாடுகளுக்கிடையே தூதரங்களுக்கிடையிலான விவகாரங்கள் தொடர்பாகவும், இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்வது தொடர்பாகவும், இருநாட்டு அமைச்சர்களும் கலந்துரையாடினர்.


இதற்கமையவே, காம்போடியாவிற்கும், இலங்கைக்குமிடையில், உற்பத்திப் பொருட்களை, ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!