கன்டபெரியின் பேராயர் இன்று இலங்கை வருகின்றார்!

கன்டபெரியின் பேராயர் ஜஸ்ரின் வெல்பெ ஆண்டகை ஒருமைப்பாட்டிற்கான விஜயமாக இன்றைய தினம் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக இலங்கை திருச்சபையின் ஆயர் டிலோராஜ் ஆர்.கனகசபை ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் இலங்கை வரும் கன்டபெரியின் பேராயர், ஒருமைப்பாட்டை பலப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கை திருச்சபையின் ஆயர் குறிப்பிட்டார்.

இன்று இலங்கை வரும் கன்டபெரியின் பேராயர், இன்று மாலை சர்வ மதத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதுடன், சனிக்கிழமை வரை இலங்கையில் தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்குச் செல்லும் கன்டபெரியின் பேராயர் ஜஸ்ரின் வெல்பெ, குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்களையும் காயமடைந்தவர்களையும் நேரில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களையும் கன்டபெரியின் பேராயர் சந்தித்து கலந்துரையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தனது இலங்கை விஜயத்தின்போது கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்யும் கன்டபெரியின் பேராயர், மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகா நாயக்கர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!