ஐ.தே.க வேட்பாளரை அறிவிக்கட்டும்-பின்னர் கூட்டமைப்பு பற்றி பேசலாம்-ஹகீம்

ஐக்கிய தேசிய கட்சி தங்களுடைய வேட்பாளரை அறிவித்தன் பின்னர் கூட்டமைப்பு தொடர்பில் முடிவுகள் எடுப்போம்-ஹகீம்

ஐக்கிய தேசிய கட்சி தங்களுடைய வேட்பாளரை அறிவித்தன் பின்னர் கூட்டமைப்பு தொடர்பில் முடிவுகள் எடுப்போம் என்பதை நாம் அறிவித்திருக்கின்றோம் என அமைச்சர் ரவ்ப் ஹக்கீம் தெரிவித்துள்ளார் .

நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் .

கூட்டமைபில் உள்ள தலைவர்கள் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தோம் இதன் போது நாம் ஐ.தே.காவின் தலைவருக்கு நாம் அறிவித்திருக்கின்றோம் அவர்களுடைய பிரசினைகளை முடிவித்துக்கொண்டு விரைவாக வேட்பாளர் ஒருவரை அறிவிக்க வேண்டும் என்பதை கூறியிருக்கின்றோம் இன்னும் இரண்டு ஒரு நாட்களின் அதன் பிரச்சினையை தீர்ப்பதாக அவர் எங்களிடம் கூறியிருக்கின்றார்

ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளக விவகாரங்களை நாம் தலையிடுவதில்லை அவர்கள்தான் யார் வேட்பாளர் என்பதை அறிவிக்க வேண்டும்

வெற்றி பெரும் வேட்பாளரை ஒருவரை அவர் அறிவிக்கவேண்டும் அதைப்போல அவருக்கு மக்கள் ஆதரவு இருக்கவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம் அதேபோல மக்கள் சஜித் பிரேமதாசாவை கேட்கின்றார்கள் என்றால் அவரை தான் முன்னிறுத்த வேண்டும் ஆளும் கட்சி என்ற அடிப்படையில் அவர்கள்தான் முதலில் வேட்பாளரை அறிவித்திருக்கவேண்டும் ஆனால் அதனை செய்யவில்லை ஏனைய கட்சிகள் அறிவித்து விட்டன அதேபோல எங்களால் தனித்தும் போட்டியிட முடியும் நாம் அதனை செய்ய முன்வரவில்லை எனவும் அமைச்சர் இதன் போது தெரிவித்தார் (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!