சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்!

அம்பாறை கல்முனைப் பகுதியில், சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்ட சந்தேகநபர், எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்த விசேட அதிரடிப்படையினர், கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை, கல்முனை நீதிவான் நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, எதிர்வரும் 11ஆம் திகதி வரை குறித்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தனியார் நிறுவனம் ஒன்றின் விற்பனை பிரதேச முகாமையாளராக கடமையாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!