தீப்பந்தம் தாங்கிய வாகனப் பேரணி மகாவலி கேந்திரத்தில் ஆரம்பம்!

31ஆவது மகாவலி விளையாட்டு விழாவின் தீப்பந்தம் தாங்கிய வாகனப் பேரணி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பு, மகாவலி கேந்திரத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

மகாவலி வலயங்களைச் சார்ந்த விவசாயிகளின் பிள்ளைகளது விளையாட்டுத் திறமைகளை வளர்த்தெடுத்து, அவர்களது ஆற்றல்களை சர்வதேசம் வரை கொண்டுசெல்லும் நோக்கில் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் மகாவலி விளையாட்டு விழா 31ஆவது தடவையாக செப்டெம்பர் மாதம் 07 மற்றும் 08 ஆகிய தினங்களில் மெதிரிகிரியவில் இடம்பெறவுள்ளது.

சர்வமத ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டதன் பின்னர் தீப்பந்தம் ஏந்திய வாகன பேரணி உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டி.எம்.எஸ்.திசாநாயக்க, மகாவலி கேந்திரத்தின் பணிப்பாளர் தயாஷித திசேரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!