விநாயகர் சிலை அன்பளிப்பு! (காணொளி)

நுவரெலியா மாவட்டம் கொட்டகலை பிதேசத்திற்கு உட்பட்ட ரொசிட்டா வீடமைப்பு திட்ட கிராமத்தில் புதிதாக அமைக்கபட்ட கற்பக பிள்ளையார் ஆலயத்திற்கு, கற்பக விநாயகர் சிலை அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பிரதேசத்தில் செப்பனிபட்ட கொங்ரீட் வீதியும் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

விஷேட பிரதேச அபிவிருத்தி அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே.இராதாகிருஸ்ணனின் நிதி ஒதுக்கீட்டில், கற்பக விநாயகர் சிலை மற்றும் செப்பனிடப்பட்ட கொங்கிறீட் வீதி மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் விஷேட பிரதேச அபிவிருத்தி அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!