யாசகம்பெற்ற தாய்க்கு வாழ்வாதாரமாக கடை கிடைத்தது!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை எல்லைக்குள் யாசகம் பெற்றுவந்த தாய் ஒருவருக்கு, கரைச்சிப்பிரதேச சபை தவிசாளர் வேழமாலிதன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஜீவராஜா ஆகியோர் வாழ்வாதார உதவி வழங்கியுள்ளனர்.

கரைச்சி பிரதேச சபைக்குட்டபட்ட இடங்களில் யாசகம் செய்பவர்களை தடுத்து அவர்களின் வாழ்வாதரததை உயர்த்தி சாதாரண மக்களை போன்று வாழச்செய்யும் நோக்குடன் கரைச்சி பிரதேச சபையால் சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் முதற்கட்டமாக நேற்றைய தினம், கிளிநொச்சி பகுதியில் யாசகம் பெற்றுவந்த தாய் ஒருவருக்கு, வாழ்வாதாரத்தை உயர்த்த சிறு கடை ஒன்றை அமைத்து கொடுத்து, கடைக்கான சில பொருட்களும், கடையை கொண்டு நடத்துவதற்கான ஆரம்ப மூலதனமாக 10 ஆயிரம் ரூபா பணத்தையும் வழங்கியுள்ளனர்.

குறித்த தாயாரது விற்பனை நிலையம், பரந்தன் பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!