சஜித்துக்கு எதிராக ரவி குற்றசாட்டுகள் பதிவு!!

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் விதிமுறைகளை மீறி 4500 ஊழியர்களை உள்ளீர்க்க அமைச்சர் சஜித் பிரேமதாச நடவடிக்கை எடுத்துள்ளார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ள முறைப்பாடுக்கமைய இன்று( 28) விசாரணைகள் ஆரம்பமாகின.

இதற்கிடையில், வீடமைப்பு, நிர்மானம் மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் கீழ் இயங்கும் மத்திய கலாச்சார நிதியத்திற்கு சொந்தமான 120 பில்லியன் ரூபா நிதி காணாமல் போனமை தொடர்பாக பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல பத்திரிகைகள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் விதிமுறைகளை மீறி 4500 ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் தேசிய வீடடமைப்பு அதிகார சபைக்கு ஆட்சேரப்பு செய்தாக முற்போக்கு தொழிலாளர் சங்கம் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தது.

அதில் பிரதிவாதியாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பதில் பொது முகாமையாளர் மற்றும் மனிதவள முகாமையாளரான லலித் எதிரிசிங்க பெயரிடப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், மத்திய கலாச்சார நிதியத்தின் நிதியை அமைச்சர் சஜித் பிரேமதாச தவறாக பயன்படுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த 22 ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கூறியிருந்தார்.

வீடமைப்பு, நிர்மானம், மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் கீழ் இயங்கும் மத்திய கலாச்சார நிதியத்திற்கு சொந்தமான 120 பில்லியன் ரூபா நிதி காணாமல் போனமை குறித்து விசாரிக்க பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையிலான குழுவை நியமித்துள்ளதாக பல பத்திரிகைகள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

அதற்கமைய அண்மையில் இந்த சம்பவம் குறித்து அமைச்சர் ரவி கருணாநாயக்க பிரதமருக்கு விளக்கமளித்ததாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!