நல்லூர்க் கந்தனிற்கு இன்று தேர்த்திருவிழா!(காணொளி)

இலட்சக்கணக்கான அடியவர்களின் அரோகரா கோசத்துடன், யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தப் பெருமானின் தேர்த்திருவிழா நடைபெறுகின்றது.

யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் நான்கு திசைகளிலும் குழுமியிருந்த இலட்சக் கணக்கான அடியவர்களின் அரோகரா கோசத்துடன் நல்லூர்க் கந்தன் தேரில் ஆரோகணித்தார்.

உலகப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் ஆடியமாவசைக்கு பின்னர்வரும் ஆறாம் நாளில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தது.

தொடர்ந்து மஹோற்சவங்கள் சிறப்புற காலை மற்றும் மாலைவேளைகளில் இடம்பெற்றுவந்த நிலையில், நேற்றைய தினம் சப்பை ரதத்திருவிழா பக்திபூர்வமாக இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை விசேட வசந்த மண்டப பூஜைகளை தொடர்ந்து ஆறுமுகப்பெருமானாக வருகை தந்த நல்லூர்க் கந்தன், காலை 7.15 மணியளவில் தேரில் ஆரோகணித்திருந்தார்.

இதன்பின் விசேட கிரியைகள் இடம்பெற்று, இலட்சக் கணக்கான மக்களின் அரோகரா கோசத்துடன், தேரில் எழுந்தருளிய நல்லூர்க் கந்தன், தேரில் திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துவருகின்றார்.

இதன்போது பெருமளவான பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் மற்றும் அடியழித்தல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியதையும் அவதானிக்க முடிந்தது.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!