மருதானை – கொழும்பு புகையிரத பாதையில் புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

மருதானை – கொழும்பு புகையிரத பாதையில் புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதுண்டு ஏற்பட்ட விபத்து தொடர்பில் மருதானை புகையிரதத்தின் சாரதி உட்பட 4 பேர் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக, புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் எம்.ஜே.டி.பெர்னாண்டோ தெரிவித்தார்.


மருதானை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத பாதையில், மருதானையிலிருந்து தெற்கு கழுத்துறை நோக்கி சென்ற 714 என்ற இலக்கத்தைக் கொண்ட புகையிரதத்துடன், மறுமுனையிலிருந்து வந்த புகையிரதம் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டது.

இதன் காரணமாக குறித்த புகையிரத பாதையில் புகையிரதம் செல்வதற்கான காலதாமதம் ஏற்பட்டது. எனினும் பயணிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை.

மருதானையிலிருந்து தெற்கு களுத்துறை நோக்கிச் சென்ற புகையிரதத்தில் சமிக்ஞைகள் மேற்கொள்ளாமல் சென்றதன் காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், மருதானை புகையிரதத்தின் சாரதி உட்பட 4 பேர் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!