கிளிநொச்சி மாவட்டத்தில், ஆதனவரி உயர்வுக்கு எதிர்பு

வறுமையில் முதலிடத்தில் உள்ள கிளிநொச்சியில் அதிகரித்த ஆதனவரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கையில் வறுமையில் முதலிடத்தில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த ஆதன வரியை அறவிடுவதற்கு கரைச்சி பிரதேச சபை எடுத்துள்ள தீர்மானத்திற்கு, சபையின் எதிர்தரப்பு சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் சுயேட்சைக்கு உறுப்பினர்கள் இன்று தங்களின் மாவட்ட அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், கிளிநொச்சி மாவட்டம் இலங்கையில் வறுமையில் முதல் மாவட்டமாக காணப்படுகிறது என்றும், வேலையில்லாப் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது என்றும் சுட்டிக்காட்டினர்.

இதேவேளை, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் இவ்விடயம் தொடர்பில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இதன்போது, கரைச்சி பிரதேச சபையினால் பொது மக்களிடமிருந்து ஒரு வீத ஆதனவரியே அறவிடப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

எதிர்த்தரப்பு சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் தெரிவித்த விடயங்கள் முழுமையாக பொய்யானது எனவும், அவர்கள் ஆரம்பம் முதல் மக்களை குழப்பும் செயற்பாடுகளிலேயே ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டினார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!