தரப்படுத்தலில் முன்னேறிய திமுத் கருணாரத்ன!

டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில், இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன முன்னேறியுள்ளார்.

ஐ.சி.சி வெளியிட்டுள்ள டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில், இலங்கை அணித்தலைவர் திமுத் கருணரத்னவின் புள்ளிகள் அதிகரித்து 6வது இடத்தில் உள்ளார்.

டெஸ்டில் சிறந்த துடுப்பாட்ட வீரர்களின் பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ள நிலையில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி முதலிடத்தில் உள்ளார்.

இரண்டாவது இடத்தில் அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித்தும், 3வது இடத்தில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சனும் பிடித்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கை அணித்தலைவர் திமுத் கருணரத்னவின் புள்ளிகள் உயர்ந்துள்ளதால் 6ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 122 ஓட்டங்களைப் பெற்றதன்மூலம் திமுத் கருணரத்னவின் புள்ளிகள் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!