தங்கம் வென்ற சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு!

உலக சம்பியன்ஷிப் பட்மிண்டன் தொடரில் தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு, உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

உலக சம்பியன்ஷிப் பட்மிண்டன் தொடரில் தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு, டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய பட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக சம்பியன்ஷிப் பட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை நஜோமி ஓகுஹராவை எதிர்கொண்ட சிந்து, 38 நிமிடங்களில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

இந்நிலையில் சிந்துவுக்கு இந்திய தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவுக்கு திரும்பிய சிந்துவுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, பயிற்சியாளர்களுக்கு நன்றி தெரிவித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த சிந்து, தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

மிகவும் எதிர்பார்த்த வெற்றி இருமுறை தவறியதாகவும், இறுதியில் தான் வெற்றி பெற்றுள்ளதாகவும் இந்தியராக இருப்பதில் தான் மிகவும் பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!