2019 ஆம் ஆண்டுக்கான, மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழுக்கூட்டம்

2019 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது மாவட்ட விவசாய குழுக் கூட்டம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள பணிப்பாளர் வை.பி.இக்பால் ஒழுங்கமைப்பில் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகள், கால்நடை வளர்ப்பு நன்னீர் மீன்பிடி போன்ற மாவட்டத்திற்குரிய விசேட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக மாவட்டத்தின் விவயாசாயத் துறையுடன் தொடர்புடைய சகல திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டம் விவசாயச் செய்கையில் பிரதான இடத்தை வகிக்கும் மட்டக்களப்பு மாவட்டம், வறட்சி, வெள்ளம், நோய்பீடைத்தாக்கம் போன்ற அனர்த்தங்களை எதிர் நோக்குகின்ற மாவட்டமாக காணப்படுகின்ற போதும் விவசாயத் துறையை ஊக்குவிக்க சகல விவசாயிகளும் உத்தியோகத்தர்களும் மாவட்டத்திற்கு கிடைக்கப் பெறுகின்ற பல்வேறு நிதியீட்டங்கள் ஊடாக விவசாய துறையினை வளப்படுத்த வேண்டும் எனவும் கலந்துரையாடப்பட்டது.

நடைபெற்ற குழுக்கூட்டத்தில் நீர்ப்பாசனம் கால்நடை, திணைக்கள அதிகாரிகள், மாவட்ட விவசாயத்திணைக்கள அதிகாரிகள், கல்வித்திணைக்கள அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள், மாவட்ட அரச திணைக்கள அதிகாரிகள் உட்பட அரச திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!