உலக சேர்பிங் தரப்படுத்தலுக்கான போட்டிகள், அறுகம்பையில்

உலகில் கடலலை நீர் சறுக்கலுக்கு புகழ் பெற்ற இடங்களில் ஒன்றான பொத்துவில் அறுகம்பையில், உலக சேர்பிங் தரப்படுத்தலுக்கான போட்டிகள், மிகவும் பிரபல்லியமான இலங்கை மற்றும் வெளிநாட்டு வீரர்களின் பங்கு பற்றுதலுடன் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.


அறுகம்பையில் எதிர்வரும் செப்படம்பர் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலக சேர்பிங் தரப்படுத்தல் போட்டியினையடுத்து அதற்கான முன் ஆயத்த ஏற்பாடுகள் தொடர்பிலான துறைசார் நிபுணர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுடனான கலந்துரையாடல் இன்று அறுகம்பையில் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டார நாயக்க தலைiயில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவி அரசாங்க அதிபர் ஏ.எம்.லத்தீப், பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.எம்.வாஸீத், பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. நஸீல் மற்றும் அறுகம்பை சுற்றுலா சபைத் தலைவர் எம்.எச்.ஏ.றஹீம், இலங்கை சற்றுலா கைத்தொழில் சம்மேளனத் தலைவர் ஏ.எம்.ஜவ்பர் உள்ளிட்ட இரானுவ, பொலிஸ், கடற்படை உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

உலகில் இவ்விளையாட்டில் புகழ்பெற்ற அவுஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து மிகவும் பிரபல்லியமிக்க 123 சேர்பிங் விளையாட்டு வீரர்களும், இலங்கையிலிருந்து 32 வீரர்களும் இப்போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர்.

இப்போட்டிகள் எதிர்வரும் செப்டம்பர் 23, 24 ஆம் திகதிகளில் உள்நாட்டு வீரர்களுக்கு நடைபெறவுள்ளன. 25, 26 ஆம் திகதிகளில் வெளிநாட்டு வீரர்களுக்கான போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதற்கமைய பாதுகாப்பு நடவடிக்கை, சுகாதாரம், போக்கு வரத்து, குடிநீர் வசதி, மின்சாரம் உள்ளிட்ட அத்தியவசிய சேவைகளை தடங்கலின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள உலக சேர்பிங் கடலலை நீர் சறுக்கல் தரப்படுத்தல் போட்டியினையடுத்து அதிகளவிலான உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இப்பிரதேசம் நோக்கி வருகை தரவுள்ளதால் 226 ஹோட்டல்கள், 3000 தங்கும் அறைகள் கொண்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதன் போது தெரிவிக்கப்பட்டது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!