விபத்தில் உயிரிழந்த இளைஞனின் இறுதிக்கிரிகைகள் நாளை

கொழும்பு ஹோமகம பகுதியில், மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் இறுதிக் கிரியைகள், நுவரெலியாவில் நாளை இடம்பெறவுள்ளது.


ஹோமாகம பகுதியில், கடந்த 18 ஆம் திகதி இரவு 11.45 மணியளவில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும், வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில், மதிலுடன் மோதியதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதில், மஸ்கெலியா பிரவ்ன்லோ தோட்ட பகுதியை சேர்ந்த 21 வயதுடைய பவித்ரன் என்ற இளைஞன் உயிரிழந்தார்.
இந்த நிலையில், பவித்ரனின் சடலம், நேற்று இரவு கொழும்பில் இருந்து, மஸ்கெலியா புரன்வ்லோ தோட்ட பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இளைஞனின் பூதவூடலுக்கு மாணவர்கள், பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், நாளை மாலை 4.00 மணியளவில், தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் இடம்பெறவுள்ளதாக, உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞன், மஸ்கெலியா சென் சோசப் கல்லூரியில் உயர் தரம் வரை கல்வி கற்ற நிலையில், கொழும்பு பகுதியில் நகைக்கடை ஒன்றில் தொழில் புரிந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!