அரசு பொறுப்பற்று இருக்கின்றது-ரோஹித அபேகுணவர்தன!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று, 4 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இது தொடர்பில் இந்த அரசாங்கம் எந்த நடவடிக்கைகைளையும் முன்னெடுக்கவில்லையென பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஊடகங்களில் வெளிப்படையாக அறிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, தெரிவித்துள்ளார்.

நெலும் மாவத்தையில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் தாக்குதல் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்காத அரசாங்கமாக அவர் நல்லாட்சியை அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அவருடைய அறிவிப்பில் நமக்கு ஒரு விடயம் நன்றாக புரிகின்றது.

இந்த அரசு இது தொடர்பில் கண்களை மூடிக்கொண்டிருக்கின்றது.

யார் யார் பின்னணியில் இருக்கின்றார்கள், தாக்குதலுக்கான உத்தரவை யார் வழங்கியது, திட்டம் தீட்டியது யார்? மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறுமா என்பது குறித்து ஆராயாமல் இருப்பதாகத்தான் கர்தினால் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

கர்தினாலுக்கு இந்த அரசின்மீது நம்பிக்கையில்லை.

இப்படி இருக்கின்றபோது சாதாரண ஒரு குடிமகனுக்கு இந்த நாட்டு அரசின் மீது நம்பிக்கை எப்படி வரும்? எனவேதான் கோட்டபாய ராஜபக்ச அறிவித்திருக்கிறார் தான் ஜனாதிபதி ஆனவுடன் உடனடியாக இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை நடத்தி உரியவர்களுக்கு தண்டனைகளை வழங்குவேன் என்று கூறினார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!