மோடிக்கு ஆங்கிலத்தில் பேசுவதற்கு விருப்பமில்லை-டொனால்ட் ட்ரம்ப்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி சரளமாக ஆங்கிலத்தில் பேசக்கூடியவர் என்றும், எனினும் அவருக்கு ஆங்கிலத்தில் பேசுவதற்குத்தான் விருப்பம் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸின் பியாரிட்ஸ் நகரில் இடம்பெற்றுவரும் ஜி7 மாநாட்டில் இந்திய பிரதமரும் அமெரிக்க ஜனாதிபதியும் சந்தித்துக் கொண்டபோதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திரய மோடியை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ‘மோடி நன்றாக ஆங்கிலம் பேசுகிறார். ஆனால் ஆங்கிலத்தில் பேசுவதற்குதான் அவருக்கு விருப்பம் இல்லை’ என்று நகைச்சுவையாக கூறினார்.

ஜி7 மாநாட்டின் பின்னர் பிரதமர் மோடியும், அமெரிக்க ஜனாதிபதியும் சுமார் 40 நிமிடங்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

பின்னர் இரு தலைவர்களும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தபோது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு சரேந்திர மோடி ஹிந்தியில் பதிலளித்தார்.

முன்னதாக இரு தலைவர்களும் தனியே கருத்து பறிமாறிக் கொள்வதற்கு அனுமதிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து ட்ரம்ப் பேசுகையில், ‘பிரதமர் மோடி நன்றாக ஆங்கிலம் பேசுகிறார்.

ஆனால் ஆங்கிலத்தில் பேசுவதற்கு அவருக்கு விருப்பம்தான் இல்லை’ என்று நகைச்சுவையாக கூறினார்.

இதன்போது இருவரும் ஒருவரையொருவர் கைகளை பிடித்து தமது நட்பை பறிமாறிக் கொண்டனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!