பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை: றுவான் விஜேவர்த்தன

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதால் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் றுவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

பியகமவில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவசரகாலச் சட்டம் கண்டி தலதா மாளிகை பெரஹரவை முன்னிட்டு நீடிக்கப்பட்டதாகவும், பொலிஸாரும் இது தொடர்பில் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

எனினும், தற்போது நாட்டின் பாதுகாப்பு நிலைமையை கவனத்தில் கொள்ளும்போது நிலமை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதால், அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிக்கவேண்டிய தேவை இல்லை என்று கூறினார்.

இதேவேளை, அவசரகாலச் சட்டம் தொடர்ந்து நீடிக்கப்படுவதனால் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டினார்.

அவசரகாலச் சட்டத்தை நீக்குவது குறித்து இராணுவத் தளபதி, பொலிஸ்மா அதிபர் ஆகியோருடன் கலந்துரையாடியே தீர்மானம் எடுத்ததாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் றுவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!