தமிழருக்கு தீர்வுதரும் கட்சிக்கே கூட்டமைப்பு ஆதரவு-சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா

தமிழருக்கு நிரந்தர விடிவு தருவதாக, எழுத்துமூலம் ஆதரவு தெரிவிப்பவருக்கே, தமிழ்தேசியக்கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என, பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு நிரந்தரமானதொரு விடிவைத் தருவதாக, எழுத்து மூலம் எந்தக் கட்சி ஆதரவு தெரிவிக்கின்றதோ, அதற்கே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில், அவரின் விசேட நிதி ஒதுக்கீடு ஒன்றின் மூலம் நிர்மாணிக்கப்படவிருக்கும் வீதி ஒன்றிற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!