பளை, கராண்டிய பகுதியில் ஏ.கே .47 துப்பாக்கி, 120 துப்பாக்கி ரவைகள் 11 கையெறிக் குண்டுகள் மற்றும் 10 கிலோ கிரேம் வெடிபொருட்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் எனக் குற்றம் சாட்டி பளை வைத்தியசாலையில்  கடந்த 19 ஆம் திகதி கைதான வைத்திய அதிகாரியின் தகவலுக்கு அமைய பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போதே இவை மீட்கப்பட்டுள்ளன. (சே)