ஸ்ரீ.சு.க உள்ளே பதவிகள் மாற்றம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளரான பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திசாநாயக்க அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதுவரை காலம் அவர் வகித்த பதவி தற்போது லசந்த அழகியவன்னவிட்க்கு வழங்கப்பட்டுள்ளது .
நேற்று இரவு இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப் பேச்சாளராக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!