யாழ் நல்லூரில், மஞ்சி நிறுவனத்தின் சிறப்பு காட்சியறை

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு, மஞ்சி நிறுவனம், ஆலய வளாகப்பகுதியில் விசேட காட்சியறையை அமைத்துள்ளது.


அதனடிப்படையில், விசேட காட்சியறை திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இதன் போது, சமயக் கிரிகைகள் இடம்பெற்று காட்சியறை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
காட்சியறையை மஞ்சி நிறுவன அதிகாரி திறந்து வைத்தார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா சிறப்பாக இடம்பெற்று வரும் நிலையில், முதன் முறையாக மஞ்சி நிறுவனம், ஆறுபடை வீடுகள் தொடர்பில், தொலைக்காட்சி வழியாக தெளிவான விளக்கத்தை வழங்கி வருகின்றது.

இந்த நிகழ்வில், மஞசி நிறுவன அதிகாரிகள், விளம்பர பகுதியினர், சந்தைப்படுத்தல் பகுதியினர் என பலர் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!