கோட்டபாய ஜனாதிபதியானால், 13 வது திருத்தம் அமுல் : டக்ளஸ்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ச, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், வடக்கு மாகாணத்தில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதுடன், 13 ஆவது திருத்தச்சட்டம், 6 மாத காலப்பகுதிக்குள் முழுமையாக அமுல்படுத்தப்படும் என, பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


இன்று, யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும்; எந்த நபர்களையும் நம்பிவாக்களியுங்கள் என நாம் கோரவில்லை. ஈ.பி.டி.பி கட்சியாகிய எம்மை நம்பிவாக்களியுங்கள் என்றே மக்களைகோருகின்றேன். ஏனெனில் இப்போதுள்ள தமிழ் தலைமைகள் போலநாம் அரசுஏமாற்றிவிட்டது, இந்தியா ஏமாற்றிவிட்டது என கூக்குரல் போடமாட்டோம்.நாம் அவ்வாறு ஒருநாளும் கூறியதில்லை. எம்மை நம்பி வாக்களித்த மக்களுக்கு நான் செல்வதை செய்னே;.

நாம் அன்றிலிருந்து 13 அவதுதிருத்தசட்ட மூலத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தN வண்டும் என்றே கூறிவருகின்றோம். அதனை பலப்படுத்தி ஓர் இறுதித் தீர்வினை எமது மக்களுக்கு பெற்றுக் கொடுப்போம். ஆனால் இங்குள்ள சக தமிழ் கட்சிகள் தீர்வு, கொள்கைகள் பற்றிக் கதைத்துக் கொண்டு இருந்தாலும் அதனை நடைமுறைப் படுத்தவோ அல்லது பெற்றுக் கொடுக்கவோ எந்த வேலைத்திட்டங்களும் இல்லை.

எமது ஆதரவான கோட்டபாயவின் ஆட்சி மலர்ந்தால் ஒரு இலட்சம் பேருக்குவேலைவாய்ப்பு, அரசியல் கைதிகள் விடயத்தில் இழுத்தடிப்புக்கள் இல்லாது விடுவிக்க நடவடிக்கை எடுப்போம், தோட்டத் அதாழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்போம், வீடு, காணி இல்லதவர்களுக்கு அதை வழங்குவோம் இவ்வாறான பல முக்கிய பிரச்சனைகளுக்கு குறுகியகாலத்தில் தீர்வினை காண்போம்.

கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்றால் முள்ளிவாய்க்கால் வரை யுத்தத்தால் கொல்லப்பட்ட பொதுமக்கள், இராணுவம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியோரை அஞ்சலி செய்யும் வகையில் நினைவுசதுக்கம் அமைக்கப்படும், அந்த நினைவுசதுக்கத்தில் அஞ்சலிசெய்யும் பொதுநினைவுநாள் ஒன்றும் பகிரங்கப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!