கடுமையான குற்றங்களை புரிந்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற முடிவு !

நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும், கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுக்களை புரிந்தமைக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை, காலியில் உள்ள பூசா சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.


அதனடிப்படையில், காலி பூசா சிறைச்சாலையில் உள்ள சிறைக் கட்டடங்களின் கட்டமைப்பில், தேவையான மாற்றங்கள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், சிறை வளாகத்திற்குள் போதைப்பொருள் மோசடிகள் மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகளை தடுக்கும் நோக்கில், சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, நீதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!