சரத் விஜேசூரியவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

நீதியான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர் சரத் விஜேசூரியவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட, நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


அந்தவகையில், வழக்கை எதிர்வரும் நவம்பர் 25 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு, மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

பேராசிரியர் சரத் விஜேசூரியவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட, நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக, ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக, பேராசிரியர் சரத் விஜேசூரியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்கள், மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்நிலையில், அடிப்படை எதிர்ப்பு மனுவை, செப்டெம்பர் 21 ஆம் திகதிக்கு முன்பாக தாக்கல் செய்யுமாறு தெரிவித்த நீதிபதி, அதற்கு கால அவகாசம் வழங்கும் வகையில், வழக்கு நடவடிக்கைகளை ஒத்திவைத்துள்ளார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!