அச்சத்தில் உள்ள, அம்பாறை அக்கரைப்பற்று வாச்சிக்குடா மக்கள்!

அம்பாறை அக்கரைப்பற்று வாச்சிக்குடா பிரதேசத்திற்கு செல்லும் குருக்கள் வீதியில் பயணித்த பார ஊர்தியொன்று பாதையை விட்டு விலகி அருகில் இருந்த வடிகானுக்குள் பாய்ந்த சம்பவமொன்று அன்மையில் நடைபெற்றது.

வடிகானுக்குள் பாய்ந்த பாரஊர்தியை மீட்டெடுக்க பல முயற்சிகள் அப்போது மேற்கொள்ளப்பட்ட நிலையில் வீதியில் அருகில் இருந்த வடிகான் சேதப்படுத்தப்பட்டதுடன் பிரதான கொங்றீட் வீதியும் பாதிப்புக்குள்ளானது.

இந்நிலையில் இதனை அவதானித்த வாச்சிக்குடா கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுவினர் பொலிசாருக்கும் பிரதேச சபைக்கும் தகவலை வழங்கியதுடன் சம்மந்தப்பட்டவர்களிடம் வீதியையும் வடிகானையும் திருத்தி அமைக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

இதனடிப்படையில் குறித்த சம்பவம் நடைபெற்று சில நாட்களின் பின்னர் சேதப்படுத்தப்பட்ட வடிகானும் வீதியும் திருத்தி அமைக்கப்பட்டது. ஆனாலும் அச்செயற்பாடுகள் உரிய முறையில் நடைபெறவில்லை என கிராம அபிவிருத்தி சங்கத்தினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

வடிகான் திருத்தப்பட்டு மறுநாளே மீண்டும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் வெள்ள காலத்தில் அதிகமான நீர் வடிந்தோடும் குறித்த வடிகான் முற்றாக உடைந்து விழலாம் எனவும் அவர்கள் அச்சம் வெளியிட்டனர்.

அத்தோடு குறித்த வீதியும் உடைந்துள்ளதுடன் பாரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் நாளடைவில் வீதியின் ஏனைய பகுதிகளிலும் பள்ளங்கள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் கூறுகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்டவர்களிடம் மீண்டும் அறிவிக்கப்பட்டபோதும் இதுவரையில் அவர்களால் ஆக்க பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தினர்.

ஆகவே உரிய வடிகானையும் வீதியையும் புனரமைக்க சம்மந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உள்வீதிகளில் குறித்த நிறைக்கு மேலான வாகனங்கள் செல்வதை பிரதே சபை தடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!