வவுனியா செட்டிகுளத்தில் விபத்து : ஒருவர் பலி

வவுனியா செட்டிகுளம் பகுதியில், நேற்று இரவு 8.00 மணியளவில், முச்சக்கரவண்டி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செட்டிகுளம் பகுதியில் இருந்து, மெனிக்பாம் நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி, கல்லாறு பாலத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து, அருகிலுள்ள மின்சார கம்பத்துடன் மோதியது.

விபத்தில், முச்சக்கரவண்டியின் பின்னிருக்கையில் இருந்து பயணம் செய்த, மெனிக்பாம் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய சுரேஸ் ஜீவானந்தம் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை, சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், அதே பகுதியை சேர்ந்த இருவர், படுகாயமடைந்த நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக, வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், விபத்து தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!