விஞ்ஞான வெளியீடுகளுக்கான ஜனாதிபதி விருது விழா

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஞ்ஞான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் இடம்பெறும், விஞ்ஞான வெளியீடுகளுக்கான ஜனாதிபதி விருது விழா, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில், இன்றுமுற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.


2017 ஆம் ஆண்டு மருத்துவ, விவசாய மற்றும் பொறியியல் துறைகளில், உயர் தரம் வாய்ந்த விஞ்ஞான ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட 240 ற்கும் மேற்பட்ட கலாநிதிகள் மற்றும் பேராசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

தேசிய ஆராய்ச்சி சபையினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் இவ்விருது விழா, இம்முறையும் 12 ஆவது தடவையாக இடம்பெற்றது.


இந்நிகழ்வில், விஞ்ஞான தொழில்நுட்ப, ஆராய்ச்சி மற்றும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் சுஜீவ சேனசிங்க, தேசிய ஆராய்ச்சி சபை தலைவர் பேராசிரியர் ஜனக டி சில்வா, தேசிய ஆராய்ச்சி சபை தலைமை நிறைவேற்று அதிகாரி மனிஷா ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!